Sunday 13 March 2011

புதுமுகம் அறிமுகம்

வணக்கம்.முதன்முதல் பதிவுலகில் அடியெடுத்து
வைக்கிறேன்.வாழ்த்துங்கள்.
இப்பதிவில் அரசியல்,இலக்கியம்,சினிமா என எனக்கு பிடித்த விஷயங்களில் விளையாட வருகிறேன்.முதன் முதலாக ஈழத்து கவிதையில் துவங்குகிறேன்.என்னை மிகவும் பாதித்த கவிதை.
                                              இரத்தத்தில் எழுதியது
இனியும் எங்களால் தாங்க முடியாது.
இனியும் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
எங்களுடைய குதிரைகளை தின்றுவிட்டோம்.
எங்களுடைய பறவைகளையும் தின்று விட்டோம்;
எலிகளையும் பெண்களையும் தின்றுவிட்டோம்...
இன்னும் எங்கள் வயிறு காய்ந்து கொண்டுதானிருக்கிறது.

எங்கள் அரண்களை மொய்த்திருக்கிறார்கள் எதிரிகள்.
அவர்கள் நாலாயிரம் பேர்களுக்கும் மேல்;நாங்கள் நானூறு பேர்.

இனியும் வில்லிழுத்து,வசைகளல் அவர்களைத்தாக்க
வலு இல்லை எங்களிடம்;அவர்களைக் குதறத்
துடிக்கும் பற்களைக்கடித்துக்கொள்ள மட்டுமே வலு உள்ளது
எங்களிடம்.

பற்றி எரியும் இக்கவிதையை விதைத்தவர் சு.வில்வரத்தினம்.
விடியல் வெளியீடான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதை நூலில் இது போன்ற வெடிமருந்துகள் கொட்டிக்கிடக்கிறது.

இது போன்ற நல்ல விசயங்களை இனம் காட்டுவேன்.
நன்றி.

8 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. அறிமுகம் ஆகும்போதே நல்ல அறிமுகக்கவிதையுடன் ஆரம்பம்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இன்னும் இரு பதிவுகள் எழுதி தமிழ்மணத்தில் இணைத்து விடுங்கள். இன்னும் நிறைய பேரை சென்றடைய வசதியாக இருக்கும்.

    வேர்டு வெரிஃபிகேஷனை நீக்கி விடுங்கள். பின்னூட்டமிடுபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.

    ReplyDelete
  5. வேலன்@சிபி@அக்பர்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. டும்டும்...டும்டும்...
    வாங்க...வாங்க...
    நாங்க நையாண்டி செய்வமே!

    நல்லா எழுதுங்க...
    உங்களுக்கு என்று தனி பாணியில் எழுதுக.
    நிறைய பதிவர்கள்
    உங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பார்கள்.

    ReplyDelete
  7. நன்றி நையாண்டியாரே!

    ReplyDelete